நமது குறைகள் கூட ஒரு நாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்குப் பல குறைகள் இருக்கும். அதை நினைத்து வருத்தப்படுவதும் உண்டு. வருத்தப்படுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை...
அந்தக் குறையை நமக்கு ஏதுவாக மாற்ற என்ன செய்யலாம் என்று சிந்தித்து அதை செயல்படுத்தினால் நமது குறைகளை நிறைவாக மாற்றி வெற்றி அடையலாம்...
நாம் ஒவ்வொருவரும் சில தனித்திறமைகள் பெற்று உள்ளோம் என்பதை யாரும் மறுக்க இயலாது. எல்லோரிடமும் சில குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு...
உங்களின் குறை, நிறைகள் உங்களுக்குத் தெரிந்தால் அது உங்களின் வாழக்கையின் வெற்றிக்கு மிகவும் உதவும்...
நாம் எல்லோரும் சில தனித்திறமைகளைப் பெற்றே பிறந்து உள்ளோம். ஒரு சிலர் நன்றாகப் பாடுவார்கள். சிலர் நன்றாக நடனம் ஆடுவார்கள். சிலர் கதை எழுதும் திறமைப் பெற்றுள்ளனர். சிலர் மேடையில் நன்றாகப் பேசும் திறமைப் பெற்றுள்ளனர்...
நீங்கள் திறமைகளையும், குறைகளையும் நன்றாக அறிந்து இருந்தால் அது உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த, சரியான துறையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் நீங்கள் எளிதாக நிபுணர் ஆகலாம்...
நீங்கள் உங்களுக்கு வராத, பிடிக்காத துறையைத் தவிர்க்கலாம் அல்லவா...?
நீங்கள் நன்றாக வாதம் பண்ணும் திறமை பெற்றிருந்தால் வழக்கறிஞர் ஆகலாம். நீங்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் ஏதோ ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுதது அதில் பயிற்சியாளர் ஆகலாம்...
உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள் தெரிந்து இருந்தால் அதற்கு ஏற்றார் போல் முடிவுகள் எடுக்கலாம். படிப்பையும், வேலையையும் சரியாகத் தேர்ந்தெடுக்கலாம்...
ஆம் நண்பர்களே...!
ஒரு சிலர் தங்களது திறன் எது, திறனற்ற குணம் எதுவென்றே தெரியாமல் கடைசி வரை வாழ்ந்து மடிகிறார்கள். அவர்களால் பெரிய வெற்றிகளை அடைந்து இருக்க முடியாது என்பது உண்மை...!
🔴 உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள், பலங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றார் போல் தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் முடிவுகளை எடுங்கள்...!!
⚫ நமது குறைகளைப் பொருட்படுத்தாமல் அதை எண்ணி வருந்தாமல் துணிந்து செயல்படுவோம்...!!!