தாழ்வுமனப்பான்மை என்பது தன்னை தானே குறைத்து மதிப்பிடும் ஒரு எண்ணம்.இது திருப்தியின்மையால் எழும் ஒரு உணர்வு.பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பது,தான் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர் என்ற ஒரு கருத்துடன் தனக்கு தானே ஒரு அரண் இட்டு தன் அறிவையும் திறனையும் தானே கணித்து கொண்டு தனக்கு தானே தடையாக இருப்பர்.

தாழ்வுமனப்பான்மை எழ காரணம்...

1.பிறருடன் ஒப்பிட்டு பேசுவது.

2.பொருளாதார சூழ்நிலை காரணமாக அவமானத்திலும், ஏழனத்திலும் வளரும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே வந்து விடும்.

3.நம்மால் இது தான் முடியும்,நம் தலைவிதி, சகிக்க வேண்டியது தான் போன்ற சுய மனதடைகள்.

4.ஒரு முறை செய்யும் தவறின் தாக்கம் அடுத்த அடி எடுத்து வைப்பதில் தயக்கம் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும்.

5.குறைந்த கல்வியறிவுடன் இருக்கிறோம்,பிற மொழி தெரியவில்லை அதனால் நாம் சொல்வது செய்வது தவறாக தான் இருக்கும் என்ற எண்ணம்.

6.பிறரிடம் இருந்து வரும் எதிர்வினை ஊக்குவிப்புகள்.

தாழ்வு மனப்பான்மையை தகர்க்கும் வழிகள்....

1.நீங்கள் அழகு என்று நம்ப வேண்டும்.

உங்களை நீங்கள் ரசிக்க வேண்டும்.

நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தம் இல்லை.

2.நேர் வினை ஊக்குவிப்புகள் தாழ்வுமனப்பான்மையை போக்கும்.

3.பொருளாதார நிலையை பொருட்படுத்த கூடாது.

4.தவறு என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.

5.பிறமொழி பேச தெரியவில்லை என்ற கவலை வேண்டாம். மொழிக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. மொழியால் கிண்டல் செய்பவர்களிடம் துணிச்சலாக எதிர்த்து நில்லுங்கள். ஏன் என்றால் இங்கு பலருக்கு தன் சொந்த தாய் மொழி பேச தெரியாது.

6.என் வாழ்க்கை தான் கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். இங்கு நிறைவான வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. எனக்கு எல்லாம் கிடைத்தது என்று ஒருவர் சொன்னால் அவர் அதில் திருப்தியாக இருக்கிறார் என்று பொருள்.அது தான் உண்மையும் கூட.

7.அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழுதாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் இல்லாது என்று உணர்ந்து அதை ஏற்று கொள்ளுங்கள்.

8.உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் அதை நினைத்து மனம் உடைந்து போக வேண்டாம். ஏன் என்றால் இங்கு இழப்பு உங்களுக்கு அல்ல உங்களை நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்....