சாதிக்க பிறந்தவர்கள் நாம் என்பதை விட சாதித்து விட்டுத் தான் பிறந்தோம் என்று கர்வம் வேண்டும்.

உண்மை தான் தந்தையின் உயிரணுவில் இருந்து தாயின் கர்ப்பப்பையை அடையும் போதே மனித உயிர் இனத்தின் போராட்டம்,ஓட்டம் ஆரம்பித்து விட்டது.

லட்சம், லட்சம் உயிர் அணுக்களில் உன்னுடைய அணு எல்லா அணுக்களையும் முந்திக் கொண்டு, ஓட்டத்தில் வெற்றி பெற்று தாயின் கர்ப்பப்பையை அடைந்து, பத்து மாதம் பத்திரமாக பொறுமையாக இருந்து இன்று இவ்வளவு வளர்ச்சி கண்டு இருக்கிறதே..இது சாதனை இல்லையா ?

இதை விடப் பெரிதாக சாதிக்க இந்த உலகத்தில் என்ன இருக்கப் போகிறது..?

தாயின் கர்ப்பபப்பையில் இடம் பிடிக்க நடந்த ஓட்டத்தில் வெற்றி பெற்ற நம்மால் இந்த பூமித் தாயின் கர்ப்பப்பையில் இடம் பிடிக்க முடியவில்லையா,?

ஆனால் பல நேரத்தில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்து கொண்டு வருகின்றோம்.

அதுதான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை.

ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டு பிடிக்கப்படாமலே போய் விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம்.

ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்து விடுகிறது.

ஆம்.,தோழர்களே.

நாம் அமர்ந்து இருக்கும் (ஒட்டிக் கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக் கொள்வோம்.

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல..

"Always Be Smile, Be Positive, Be Quit,Be Hard Work.''