1. மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை! - விவேகானந்தர்

2. உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! - அப்துல்கலாம்

3. தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! -ஃபிடல் காஸ்ட்ரோ

4. நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால்உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்

5. நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை!

6. முடிவெடு. அதை நீ முடித்துவிடு!

7. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை! - புத்தர்

8. நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு! - தெரசா

9. வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! -அப்துல்கலாம்

10. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும்! - அப்துல்கலாம்

11. பாதையைத் தேடாதே. உருவாக்கு. - லெனின்

12. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட, சரியான பாதையில் மெதுவாகச் செல். - புத்தர்

13. பணத்தைக் கொண்டு கடவுளைக் கண்டுபிடித்துவிட முடியாது.

14. சும்மா ஆடுற பேய்க்கு சாம்பிராணி புகை போட்டால் சொல்லவா வேண்டும்.

15. சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல். - மகாவீரர்

16. குரு மொழி கேளார் நற்கதி பெறார். - கீதை

17. காலத்துக்கு பாகுபாடு கிடையாது. யார் மீதும் அதற்குப் பாரபட்சம் இல்லை. - தாமஸ்மான்

18. நீ அமைதியாக வாழ விரும்பினால் சந்தேகப்பேர்வழியாக இராதே.

19. வாழ்க்கை இரண்டு பகுதிகளை உடையது. சென்ற காலம் ஒரு கனவு. வருங்காலம் ஓர் ஆசை.

20. அன்புள்ள இடத்தில் நீர் இனிக்கும். - கன்பூசியஸ்