தேடுதலுக்கே இடமின்றி போகும் போது மட்டுமே மனிதன் ஆத்ம ஞானம் பெற்ற மனிதனாகின்றான்..
அவனது தேடுதல் ஆண்டவனை நோக்கியம் அவனருளை நோக்கியும் மட்டுமே.
மனிதன் தன்னை அறிந்து விட்டால், அவனு(ளு)க்கு மேற்கொண்டு அறிய வேண்டுவது ஒன்றும் இல்லாமல், தேடலற்ற மனிதன் ஆகிறான்(ள்). "ஜீவன் முக்தன்" எனப்படும் அந்நிலையில் அவனை(ளை)த் தேடி எல்லாம் வரும். இது அத்வைதம்.
தேடலற்ற அந்நிலையில், அவன்(ள்), 'இருப்பின்' அருளுக்குப் பாத்திரமாகிறான் (ள்) உடல் இருக்கும் வரை தான் அவன(ள)து உலக வாழ்வு, பிறகு, உலக வாழ்விலிருந்து, நிரந்தர விடுதலை, என்கின்றன, உபநிஷத்துக்கள், என விசிஷ்டாத்வைதம் கூறுகிறது.
உலக வாழ்க்கையில் தேடப்படும் பொருட்கள் நிரந்தர மகிழ்ச்சியைக் கொடுக்காது, தன்னலமற்ற செயல்களே மகிழ்ச்சியைக் கொடுக்கும், இதுதான் பரம்பொருளுக்கு அனுசரணையாக வாழ்தல், இதுதான் மோக்ஷம் துன்பத்திலிருந்து அவரவர்கள் விடுதலை அடையும் வழி, என துவைதம் கூறுகிறது.
மொத்தம் தேடலற்ற மனிதனை கண்டு பிடிப்பது இயலாத காரியம்.. நாம் எல்லோரும் ஏதோ ஒரு தேடுதலுக்கு உட்பட்டவர்களே..