முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் ஒருவர் தனது மனத்தையே மூலதனம் ஆக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்
மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனம் ஆக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக் கொள்வதோடு முறையான பயிற்சியும் இருக்க வேண்டும்.
முயற்சி செய்யாமல் வெற்றி கிடைக்காது, அதே போல் முயற்சி செய்பவர்கள் எல்லாம் வெற்றி பெறுவது இல்லை.
திட்டமிட்டு நாம் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். தோல்விகள் கூட நல்ல அனுபவங்களைத் தரும்.
அதோடு, வெற்றிக்கான பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.
எனவே வெற்றியைப் போலவே அதன் பாதையும் முக்கியம் தான்
புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் படேர்வஸ்கி அவர் புகழின் உச்சியில் இருந்தபோதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின் இசைத்துப் பயிற்சி செய்வார்.
ஒரு முறை அவரது நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும் வயலின் கலைஞர் ஒருவர் ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.
அதற்கு படேர்வஸ்கி.
'' எனது வெற்றியின் ரகசியம் தினமும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும்.
நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.
நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.
எந்தத் துறையிலும் ஒருவர் வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது தான் அவரால் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உழவுக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. இல்லை என்றால் அது துருப்பிடித்து விடும்.
அது போலத்தான் தொடர்ந்து ஈடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.
உங்களுக்கு 2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள்
அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரைக் கடந்தார். அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால் தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.
வாழ்க்கையை வெற்றிகரமாக வாழப் பலவிதமான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. நன்கு பயிற்சி அடைந்த ஒருவர், தேவையற்ற கடின உழைப்பு கொடுக்காமல், சாதுர்யமான செயல்பாட்டின் மூலம், குறைந்த நேரத்தில் அதிக பலன்களை அடைய முடியும்.
வாழ்க்கைத் தேவைகளை அடையும் செயல்முறைகளும் அனைத்து உயிர் இனங்களுக்கும் உள்ளேயே அமைந்துள்ளன.
பல உயிரினங்கள் தன் குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கின்றன
குழந்தையாக பிறந்ததிலிருந்தே மனித வாழ்க்கையில் பயிற்சி தொடங்கி விடுகிறது. பயிற்சி இல்லாத மனிதன் ஒரு மிருகம் போலக் கூட வாழ முடியாது. அவனுக்கு எதையுமே செய்யத் தெரியாது.
ஆம்.,தோழர்களே..,
ஒரு செயலில் வெற்றி பெற முறையான பயிற்சியும், முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட, ஆக்கத்தோடும், ஊக்கத்தோடும் முயற்சியோடு முறையான பயிற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை உடையது.