எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் பயனில்லை. அத்தகைய, மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியமான உடல்.

ஆரோக்கியம்' என்றால் என்ன? உலக சகோதர மையம்' என்ற அமைப்பு சொல்கிறது...

'உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்று இருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்' என்கிறது..

ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.

இது பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.

உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மனஆரோக்கியம் குறையும்;

அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும்.

தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும்.

அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.

ஆனால், சிகரெட் , குடி, போதைப் பழக்கத்தை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருந்தால் தான் தன் குடும்பத்தை சரிவர அவர்களால் வழி நடத்த முடியும்.

சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.

ஆம்.,தோழர்களே.

இதுவரை போனது போகட்டும், இனி மேலாவது...

நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் நாள்தோறும் சரியாய் செய்வோம்.,

யோகா,தியானம் முறைப்படி செய்வோம்.,

உணவும்,ஓய்வும் முறையாக் கொள்வோம்.,

உறங்கும் நேரம் வகுத்துக் கொள்வோம்.,

முடிந்த அளவு இல்லாதவர்களுக்கு உதவுவோம்..

உடல்,மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்..