வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன் வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு...
தோல்வியைக் கண்டு மிரண்டுப் போய் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம்...?
தோல்விக்குப் பின் வெற்றி என்ற கருத்து பொய்யா!, மெய்யா?, என்று பொறுத்திருந்துப் பார்க்கலாமே...!
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்...
எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் துயரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற மெய்யியல் (தத்துவம்) அவர்களுக்குப் புரிவதில்லை...
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த நேர்மறை எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்...
நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்...
நம்மை விட உடலில் வலிமை யானை..,
நம்மை விட வேகத்தில் சிறந்தது குதிரை..,
நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை...,
இப்படி மிருகங்கள் நம்மை விடப் பல மடங்கு வலிமையாக இருந்தாலும், நாம் தான் அவைகளை அடக்கி ஆள்கிறோம், காரணம்!, மனிதன் மட்டுமே மனவலிமை கொண்டவன் என்பதால்...
ஆம் நண்பர்களே...!
🔴 நமக்கு ஏற்படுகிற சிக்கல்களும் அப்படித் தான். அதனை அடக்கியாளும் திறன் நம்மிடம் உள்ளது...!
⚫ சிக்கல்களை நயமாக எதிர்கொள்வோம். வெற்றிப்படியை விரைந்து அடைவோம்...!