Interpersonal Skills
Interpersonal Skills - தனி நபர் திறன்

ஒவ்வொரு தனிநபரின் பழக்கவழக்கங்கள், மனநிலை, குணாதிசியங்கள், தோற்றம் மற்றும் நல்லொழுக்கங்கள் போன்றவை அவர்களை சூழ்ந்துள்ள சமுதாயாத்தினையும் உள்ளடக்கியுள்ளது. தனி நபர் திறன் Interpersonal Skills என்பது ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்கள், மனநிலை, குணாதிசியங்கள், தோற்றம் மற்றும் நல்லொழுக்கங்கள் போன்றவற்றினை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதேயாகும். தனிநபரின் திறனானது Interpersonal Skills குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் இந்த உலகத்தை கவனிக்கும் விதத்திலும் அமைகிறது. தொலைக்காட்சி, சினிமா போன்றவையும் தனிநபர் திறன் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு ஆரோக்கியமான தனிநபர் திறனானது மனிதனின் மன அழுத்தம், தேவையற்ற விவாதங்கள் போன்றவற்றை குறைக்கிறது. மேலும் பேசும் திறனை, மற்றவரிடமான நட்புறவை மேம்படுத்துகிறது. மற்றவரை நன்கு புரிந்து கொள்ளவும், சந்தோஷத்தை அதிகரிக்கவும் செய்கிறது. (Interpersonal Skills)

தொடர்பு திறன் (Communication Skills )

பேசுவது என்பது எளியதே. ஆனால் அடுத்தவரிடம் அவருக்கு ஏற்ப பேசுவது ஒரு தனி திறனாகும். ஏனெனில்,நாம் அவர் பேசுவதை உற்று கவனித்தால் தான் திறமையாகப் பேச முடியும். பய உணர்வு, கோபம் மற்றும் மன அழுத்தத்துடன் உள்ளவர்களிடம் பேசுவதும் ஒரு தனி திறனே. ஏனெனில் அவர்களிடம் பேசும் போது நம்மையும் மீறி கோபப்பட்டால் நம் பேசும் திறன் குறைந்து, ஏதாவது பேசிவிடுவோம். இத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் பேசுவதற்கு முன்பு எப்பொழுதும் அடுத்தவர் என்ன பேசுகின்றனர் என்பதை நன்கு கவனிக்க வேண்டும். நாமாகவே ஒரு யூகத்தில் பேசக் கூடாது. கவனிக்கும் திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக பெரும்பாலானவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தான் யோசிக்கின்றனர். அதை விட்டு, அடுத்தவர் பேசுவதை நன்றாக கவனித்தாலே நன்கு பேசலாம். அடுத்தவர் பேசுவதற்கு பதில் கொடுக்கலாம், பதிலாக எதிர்க்க வேண்டாம். அடுத்தவர் என்ன பேசுகிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால் தெளிவு பெற்று பின் பேச வேண்டும். அவ்வாறு செய்யும் போது தான் அவர்கள் பேசுவதற்கு மாற்று கருத்து இருந்தாலும் முறையாக எடுத்து சொல்ல முடியும். மனநிலை தொடர்பான திறன் இந்த திறனானது நாம் யார், எதைப் பற்று பேசப் போகிறோம் என்பதையும் நம் தேவை, விருப்பம், பண்புகள் மற்றும் தோற்றம் போன்றவற்றையும் சார்ந்த்தாகும்.

உறவுமுறை தொடர்பான திறன்

உறவுமுறை தொடர்பான திறன் அடுத்தவர் நம்முடனும், நாம் அடுத்தவருடனும் கொண்டிரிக்கும் செயல்பாடுகளைப் பொருத்தது

கலாச்சாரம் தொடர்பான திறன்

அவரவர், கலாச்சாரத்தைப் பொருத்தே நாம் கற்றுக் கொண்ட பழக்கவழக்கங்கள், கடுப்பாடுகள் போன்றவை அமைகின்றன. உ.ம் நம் கலாச்சாரம் வேறு, வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு

உறுதியாகப் பேசுதல் (Assertiveness)

நம் எண்ணங்களையும் உரிமைகளையும் உறுதியாக வெளிப்படுத்தும் திறனே உறுதியாகப் பேசுதல் ஆகும். அப்படி உறுதியாகப் பேசும் போது அடுத்தவரின் உரிமைகளை மீறவும் கூடாது. இப்படி வெளிப்படையாகவும், நேர்மையாகவும், நேரடியாகவும் பேசும் போது நம் தனித்தன்மை நன்கு வெளிப்படும். உறுதியாகவும், தெளிவாகவும் பேசும் திறன் கொண்டவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதோடு அவர்கள் வேலை பார்க்கும் வட்டத்திலும் மதிப்பு உயரும். இதன் மூலம் நேர்மையான நண்பர்கள் கிடைப்பதோடு சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம். இப்படி இருக்கும் போது தனிநபரின் முடிவெடுக்கும் திறனும் நன்கு மேம்படுகிறது.

கருத்து வேறுபாடு/சண்டை (Types of Conflicts)

தனிமனிதருக்குள் ஏற்படுவது - முடிவெடுப்பது, சரியாக ஒன்றை தேர்ந்தெடுப்பது தனிமனிதருக்கும் பிறருக்கும் ஏற்படுவது ஒரே குழுவிலுள்ள இருவருக்குள் ஏற்படுவது இருவேறு குழுவிற்குள் ஏற்படுவது மாற்று கருத்தினால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் எதிர்மறை விளைவுகள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது எதிர்மறை விளைவுகளை நம் போட்டியாளரிடம் உருவாக்கும் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் போது நமக்கான தலைமையும் சரியாக அமையாது. நமது நேரமும்,உழைப்பும் வீணாகிறது. நேர்மறை விளைவுகள் மாற்றுக் கருத்துள்ளவர்களை, பிரச்சனைகளை ஆராய்ந்து பார்த்து அவற்றை நீக்கி முடிவுகளை நோக்கி வேலை செய்ய சொல்லலாம். மாற்றுக் கருத்துகள் உருவாகும் போது, நிறைய புதிய விஷியங்களை உருவாக்கலாம். ஒரே குழுவினில் உருவாகும் போது, பிரச்சனைகளைத் தீர்த்து ஒற்றுமையை அதிகப்படுத்தலாம். இவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கும் போது, விருப்பத்தோடும், மன நிறைவோடும் மற்றும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர். சண்டை ஏற்படும் விதங்கள் அதிகாரம் செய்வது இணைந்து வேலை செய்வது விட்டுக் கொடுப்பது ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலை குறைப்பதற்கான வழிமுறை கோபம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்றவை நேரடியாக வெளிப்படுத்தலாம். தேவைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டு, ஏற்று கொள்ளப்படுகிறது. மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை திறந்த மனதுடையவராக இருத்தல் அடுத்தவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது அடுத்தவர்களையும் சரிசமமாக பார்ப்பது அடுத்தவரின் மீது மரியாதையுடனும், இறக்கத்துடன் நடந்து கொள்வது சுறுசுறுப்புடனும், கவனமாகவும் அடுத்தவர் பேசுவதை கவனிக்க வேண்டும் கோபத்தை கடுப்படுத்துதல் பொதுவாக நாம் கோபத்தை எப்பொழுதும் அப்படியே வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதனை கடுப்படுத்துவதே மிகச் சிறந்தது. கோபப்படுவதனால் மன அழுத்தம், பிறரை புண்படுத்துதல், அடுத்தவர்களையும் கோபப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது, பயமுறுத்துவது போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதால நம்முடைய குறிக்கோளை எளிதாக அடைய முடிகிறது, அவசரநிலையையும், பிரச்சணைகளை எளிதாக சமாளிக்கவும் முடியும் மேலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கோபப்படுவது தேவையயில்லாத நிறைய பிரச்சணைகளை உருவாக்கும். அடக்கிவைக்ப்படும் கோபத்தாலும் நிறைய தீய விளைவுகள் ஏற்படுகின்றன. இதுவும் எதிர்காலம் பற்றிய அட்சத்தையும், மன அழுத்ததையும் ஏற்படுதுகிறது. கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் உறவுமுறை, விஷயங்களை எடுத்துக் கொல்லும் முறை, ஒழுக்கம் மற்றும் யோசிக்கும் திறனையும் பாதிக்கிறது. மேலும் நிறைய உடல் நலக்குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. (இரத்த கொதிப்பு, தலை வலி, தோல் வியாதிகள், செரித்தல் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது). கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் தான் கொலை, குற்றம் போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றன.

கோபத்தை கட்டுப்படுத்தும் முறைகள்

கோபம் ஏன் வருகிறது என்று யோசிப்பதை விட எதனால் வருகிறது என்று உணரவேண்டும். (டென்ஷன்,தலைவலி) உண்மையாக நம்மை பாதிப்பது எது என்பதை அறியவேண்டும். கோபம் வரும் போது, அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். (அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, அமைதியாக இருப்பது, மூச்சை இழுத்து விடுவது, அமைதியான இடத்திற்கு செல்வது போன்றவை). கோபப்படும் போது நாம் நடந்து கொள்ளும் முறையை கண்டறிய வேண்டும். நம் கோபத்திற்கு நாமே தான் காரணம் என்பதை உணர வேண்டும். உறுதியாக பேசுவதை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும். நம் கோபத்திற்கு காரணமானவரிடம் பேசி புரியவைக்க வேண்டும். அவர் கோபப்படும் போது நடந்து கொள்ளும் முறை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். நம்முடைய எண்ணங்களை வெளிப்படையாகவும், தெளிவாகவும் அடுத்தவருக்கு வெளிப்ப்டுத்தும் கடமை நமக்கு இருக்கிறது என்று நாம் உணர வேண்டும். அது போல் அடுத்தவர்கள் அவர்களின் பிரச்சனைகளை அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும். அது அவர்களின் கடமையேயாகும். இது போல் மேலே உள்ள செயல்களை செய்யும் போதும், முறையாக உடற் பயிற்சி செய்யும் போதும், நமக்கு பிடித்த ஏதாவது விஷியங்களில் நமது கவணத்தை திசை திருப்பக் கற்றுக் கொள்ளும் போதும் நமது மன அழுத்தம் குறைந்து, கோபம் முழுமையாகக் குறைகிறது.