Life Quotes - வாழ்க்கை சிந்தனைகள்
1) "கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்டால் எப்படி ஜீரணமாகும்?" என்று கிராமத்தில் பழமொழி உண்டு. அதுபோல நல்வழியில் வாழாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டு மன நிம்மதியைத தேடினால் அது எப்படி கிடைக்கும்?.
2) மனித வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் அந்த மனிதன் போடும் திட்டங்களும், ஆடம்பர வாழ்க்கையும், ஆணவச்செயல்களும் கணக்கில் அடங்காதவை.
3) இந்த நிமிடம் இருக்கும் மகிழ்ச்சி அடுத்த விநாடியே மாறிப்போகும் நிலையை நம்மில் பலர் அனுபவித்து இருக்கலாம். இந்த நொடியில் காணப்படும் துன்பம், வலி, வேதனைகள் இறைவனின் அருளால் அடுத்த விநாடியே மாறி சுகம் நிம்மதி கிடைத்ததையும் பலர் அனுபவித்து இருக்கலாம்.
4) இறைவன் காட்டிய வழி எதுவோ அதுவே நல்ல வாழ்வும், வளமும், நலமும் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. அந்த நிம்மதியான வாழ்வு கிடைக்க நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பல நல்ல நூல்களில் நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.
5) நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்கு தடையாக நமது பேராசைகள், ஆணவம், உறவுகளையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்து வாழ்வது போன்ற தீயகுணங்கள் உள்ளன.
6) பணம், அழகிய வீடு, அழகான மனைவி-மக்கள், உயர்ந்த பதவி போன்றவை இருந்தால் நிம்மதியாக, மகரயாழ் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் இதுவெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. இவை இருந்தால் இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறு.
7) நமது தேடல்களும், எண்ணங்களும், ஆசைகளும் தான் நமது வாழ்வின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. அது நம்மிடம், நம் வாழ்க்கை முறையிலேயே உள்ளது. "இறைவனின் நெருக்கம்" தான் நமது வாழ்வை முழுமையாக்குகின்றது. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக் கொண்டு போகப்போவதுமில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப்படுவதால், எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபின், நமது உடமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள்.
அந்த நிலையில் மற்றவர்களது பாராட்டுதல்களோ, அல்லது விமர்சனங்களோ உங்களுக்கு தெரியப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவுக்கு வந்துவிடும்.
உங்களை கேட்காமலேயே அவை முடிக்கப்பட்டு விடும். உங்களின் குழந்தைகளைப்பற்றி கவலைப்படாதீர்கள். அவர்களின வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. சம்பாதிக்கிறேன் என்று பணத்தை தேடி அலையாதீர்கள்.
பணத்தைவிட உங்கள் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டு தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும்,நாளொன்றிற்கு அரைகிலோ அரிசிக்கான சாதத்திற்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும், கண்ணை மூடி நிம்மதியாக தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே,ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும்,ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருக்கும்.
பிரச்னைகள் இல்லாத மனிதனை காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். பணம்,புகழ்,சமூக அந்தஸ்து என மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும்,ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள். மாற்றுவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்கள் நேரமும்,ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!!
8) உழைத்துக்கொண்டே இரு...
நேரம் போவது தெரியாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் காதலுக்காகவும்
ஏங்கித் தவிக்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் போலி அன்புக்குள்
மூழ்கி விட நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் ஆசை வார்த்தைகளுக்கும்
மோசம் போக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் தேவைகளுக்காக மட்டும்
மாட்டிக் கொள்ள நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் அலட்சியத்தையும்
அலசிப் பார்க்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரினது பிரிவாலும்
கண்ணீர் வடிக்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் துரோகத்தை கண்டு
துவண்டு போக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் கோபத்தையும்
சட்டை செய்ய நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் திமிரிற்கும்
அஞ்சி அடிபணிய நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் பழிச் சொற்களுக்கும்
பலியாக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
உடலும் உள்ளமும் களைத்து
உறக்கம் உச்சம் தொடும் வரை
உழைத்துக்கொண்டே இரு...!
உறவுகள் மறந்து உணர்வுகள் துறந்து
உதிரம் சிந்தி உயிர் போகும் வரை
உழைத்துக்கொண்டே இரு...!
வார்த்தைகளால் பதில் சொல்வதை விட வாழ்ந்து காட்டி பதிலுரைக்கும் வரை உழைத்துக் கொண்டே இரு...!
9) மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று.
ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்,
வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல...!!!
நாம் அனைவரும் ஒரே
மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ
அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்....!!!
நாம் எதை சேர்க்கிறோம் அற்பத்தையா....?
இல்லை அற்புதத்தையா......
அற்பம் என்னும் ஆறுகுணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால்
அற்பம் நம்முள் எட்டிப் பார்காது....!!!
அற்புதம் நம்மை விட்டு விலகிபோகாதே....
சிந்திப்போம் தெளிவடைவோம்...
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் காதலுக்காகவும்
ஏங்கித் தவிக்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் போலி அன்புக்குள்
மூழ்கி விட நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் ஆசை வார்த்தைகளுக்கும்
மோசம் போக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் தேவைகளுக்காக மட்டும்
மாட்டிக் கொள்ள நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் அலட்சியத்தையும்
அலசிப் பார்க்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரினது பிரிவாலும்
கண்ணீர் வடிக்க நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் துரோகத்தை கண்டு
துவண்டு போக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் கோபத்தையும்
சட்டை செய்ய நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் திமிரிற்கும்
அஞ்சி அடிபணிய நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
எவரின் பழிச் சொற்களுக்கும்
பலியாக நேரமில்லாமல்
உழைத்துக்கொண்டே இரு...!
உடலும் உள்ளமும் களைத்து
உறக்கம் உச்சம் தொடும் வரை
உழைத்துக்கொண்டே இரு...!
உறவுகள் மறந்து உணர்வுகள் துறந்து
உதிரம் சிந்தி உயிர் போகும் வரை
உழைத்துக்கொண்டே இரு...!
வார்த்தைகளால் பதில் சொல்வதை விட வாழ்ந்து காட்டி பதிலுரைக்கும் வரை உழைத்துக் கொண்டே இரு...!
9) மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று.
ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்,
வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல...!!!
நாம் அனைவரும் ஒரே
மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ
அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்....!!!
நாம் எதை சேர்க்கிறோம் அற்பத்தையா....?
இல்லை அற்புதத்தையா......
அற்பம் என்னும் ஆறுகுணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால்
அற்பம் நம்முள் எட்டிப் பார்காது....!!!
அற்புதம் நம்மை விட்டு விலகிபோகாதே....
சிந்திப்போம் தெளிவடைவோம்...