இந்த பதிவில் வாழ்க்கை அனுபவம் பற்றிய சிறந்த சிந்தனை துளிகள்

* புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை .மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.

* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை.. பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். நியாயத்திற்கு நன்மை உறுதி

* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
...
* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.

* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில் ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.

* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு. முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தபடியாய் உங்களுக்கு இறை நம்பிக்கை கூட அவசியம் இல்லை.. உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அகங்காரத்தைக் களைந்தால் நல்ல சிந்தனையும் பகுத்தறிவும் , ஞானமும் ஏற்படும். அகங்காரத்தைக் களைந்ததால் தான் புத்தருக்கு ஜானம் பிறந்தது

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* தோல்விகளை சந்தித்து, இன்னல்களை கடந்து, ஏளனங்களை புறம் தள்ளி,
அவமானங்களை எதிர் கொண்டு, துரோகங்களை மறந்து .... இறுதியில் வெற்றி என்னும் மைல் கல்லை அடையும் ஒவ்வொரு மனிதனின் பின்னால் இருப்பது இந்த "விடாமுயற்சி" என்னும் பிடிமானமே.! இருளைச் சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருந்தால்..! நீங்களே பலருக்கு ஒளியாக மாறுவீர்கள்..!

*அனைத்தும் அதன் நேரத்திற்காக காத்திருக்கிறது ... எந்த ரோஜாவும் அதன் நேரத்திற்கு முன் பூப்பதில்லை , சூரியன் அதன் நேரத்திற்கு முன் உதிப்பதுமில்லை... காத்திருங்கள்!!! உங்களுக்கானது உங்களிடம் வரும்...

*மனதில் மறைத்து
வைத்திருக்கும் நியாயமான
கேள்விகள் எல்லாம்
மறைக்காமல் கேட்டு விட்டால்,
மருந்துக்குக் கூட ஒரு உறவுகள் கூட நிலைக்காது...


* தெரியாமல் செய்த தவறாயினும்.. அறியாமல் செய்த தவறாயினும்..
ஒரு நாள் நிச்சயம் திரும்பி உன்னை வந்தடையும்!

* அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று வாழ ஆரம்பித்து விட்டால்..
நீ திரும்பிப் பார்க்கும் போது.. உனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டாய் ! உனக்காக வாழு !

* எத்தனை தர்மங்கள் செய்தாலும்,பூஜைகள்
செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்....
உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டு..!!

* நீ எப்படி இருந்தாலும் நான் உன்னுடன் தான் இருப்பேன்' என்பதில் ஆரம்பித்து,... நீ இப்படி இருந்தால் தான் என்னுடன் இருக்கலாம்' என்பதாக முடிகிறது

* நீ செய்யும் தவறுக்கு எதிர்பாராத நேரத்தில் தண்டனையும், நீ செய்யும் நன்மைக்கு தக்க சமயத்தில் உதவியும் நிச்சயம் கிடைக்கும்...!

*வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது

* சிரிப்பு எனும் சாவியைத் தொலைத்து விட்டால்...
சந்தோசம் எனும் வீடு பூட்டியே இருக்கும்..!!

*பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டாலே...
எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்....

*தேவைக்காகப் பழகும் நண்பர்களை விட...
பழி தீர்க்கும் எதிரிகள் மேலானவர்கள்...

* நம் வாழ்க்கையில் சரியாகவும்  உண்மையாகவும் இருந்தால்....
சிறு இடத்தில் கூடப் பொய்யாக சிரிக்கவோ நடிக்கவோ சூழ்நிலை ஏற்படப் போவதில்லை...!!

* யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை...
நமக்காக வாழ்ந்து விட்டுப்
போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே..

* திரும்பத் திரும்பப் பேசத் தோன்றும் மனநிலை அனைவரிடத்திலும்
வருவதில்லை....
மிகப் பிடித்தவரிடத்தில் மட்டுமே
அப்படி பேசத் தோன்றும்...

* என்ன தான் பேசுகிறோம் என்று யோசித்தால் பெரிதாய் ஒன்றுமே இருக்காது... இருந்தாலும் பேச வேண்டும் என்பதே மனதின் தேடல்....

* கிடைத்த அதிர்ஷ்டத்தை வைத்து சந்தோசப்பட்டுக்கணும். இந்த அதிர்ஷ்டம் மறுபடியும் வருமானு யோசிச்சோம்னா வந்த அதிர்ஷ்டமும் நம்மைக் கடந்து விடும்..

* மகிழ்வாக இருங்கள்
மற்றவை தானாக உங்களின் மடியில் விழும்.
வாழ்க்கை வாழக் கற்றுக்
கொள்ளுங்கள்..!
மகிழ்வாக இருங்கள்..
மற்றவர்களின் மகிழ்விலும்
கவனம் கொள்ளுங்கள்.

* அன்பு கிடைக்காதவர்களுக்கு தவமாக மாறி விடுகிறது.., அன்பு அதிகம் கிடைத்தவர்களுக்கு மதிப்பில்லா ஒன்றாகவே மாறி விடுகிறது ..!

* இழந்ததைத் தேடாமல்..
இருப்பதைத் தொலைக்காமல்..
இருப்பது போதுமென்று.
இருந்து வந்தால்..
இன்னல்கள் இல்லா..
இனிமையான வாழ்க்கையை..
இன்புற்று வாழலாம்....!

* நம்மில் பலருக்கு
மற்றவர்களின் துன்பத்தின்
போது ஆறுதல் சொல்லும்
தைரியம்
நமக்கு ஒரு துன்பம்
ஏற்படும் போது இருப்பதில்லை.

* வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை என்றும் மறவாதீர்கள்.
ஒன்று மற்றவர் உழைப்பில் வாழக் கூடாது, இரண்டு மற்றவர் சிரிக்கும்படி வாழக் கூடாது.

* நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் நீ கூழாங்கல் தான் நீ கூழாங்கல்லாக இருந்தாலும்தகுதி உள்ளவர் கையில்கிடைத்தால் வைரமாக மாற்றப்படுவாய் உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல..
நீ சேரும் இடத்தையும் சார்ந்ததே..!!