நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்
நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்
(Time management is Life management..)

தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ நாம் செலவு செய்யலாம்.

இன்றைய அவசரகால உலகில் மனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாகத் தான் ஒரு நாளை செலவு செய்கிறார்கள்.

பணம் என்ற மாய வலையில் சிக்கிப் பலர், அமைதி மற்றும் ஆனந்தத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்..

வாழ்க்கையில் வெற்றி பெற மாங்கு மாங்கு என்று வேலை செய்வதில் மட்டும் இல்லை.,

24 மணி நேரத்தை சரியாகத் திட்டமிட்டு, சிந்தனை வழியில் வேலையைத் திறம்படச் செய்து,சாதனை படைப்பதில் தான் உள்ளது.

காலத்தின் அருமையை முதலில் உணருங்கள்..

நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!

செயற்கரிய செயல்களைத் திட்டமிட்டு செய்யுங்கள்..
உங்களுக்கு கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்..

ஆம்.,நண்பர்களே..,

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள்..

கண்மூடி கண் திறப்பதற்குள் முடிகின்ற மிகக் குறுகிய கால வாழ்க்கை.("LIFE IS SHORT, MAKE IT SWEET AND PURPOSEFUL")

நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்.
("TIME MANAGEMENT IS LIFE MANAGEMENT")

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத தொலைக்கிறான்.

6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டாயம் தேவை,

அதுவே வாழ்க்கை நிர்வாகம்..