ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானதாகும். இது உடல்,மனம் இரண்டையும் குறிப்பிடுகிறது.
நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் போது நாம் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு ஊட்டச்சத்து மிகமிக அவசியம். அதற்கு சத்தான, சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டும்.
நம்முடைய உணவில் உப்பு, சர்க்கரை, போன்றவை அளவாக இருக்க வேண்டும், கொழுப்புச்சத்து குறைவாக இருக்க வேண்டும்.
பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் .
உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல்படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
உடல் எடைக் குறைப்பை சரியான உடற்பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடைக் குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற்பயிற்சி அவசியம்.
ஃபிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள்.
இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
சிரிப்பு ( Laugh therapy) புற்றுநோய், இதய நோய், மனச்சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்தால் அதனை ஒப்புக் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்த உதவும்
உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசித் தீர்க்கப் பாருங்கள்.
நேர்மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.
வருடத்திற்கு ஒரு முறை உடல் நலப் பரிசோதனை மிக மிக அவசியம்.
ஆம்.,நண்பர்களே..,
ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்வதைப் போல ,உங்கள் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்..
பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.