3 ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்கார வீட்டு 6 மாதக் குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாகப் பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,பணக்கார அம்மாவும் பணத்தைச் செலுத்திப் பாலை வாங்கிக் குழந்தைக்கு ஊட்டுகிறார்.
ஒருநாள் சுற்றிப் பார்த்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் , ரோட்டின் ஓரத்தில் இருந்த டீக்கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்காரப் பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை என்று சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்.
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல, அதைக் கொடுக்க நினைப்பவனே உண்மையான பணக்காரன்.
ஆம்..நண்பர்களே...
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்,. நம் கண்களுக்குத் தென்படுவதில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.
தொடக்கம் நாமாக இருப்போமே.