எந்தத் தொழில் செய்தாலும், எந்தத் துறையில் இருந்தாலும், அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டும்...

பணம், புகழ் வேண்டும் என்று உழைப்பதற்கு மாறாக, எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும், குறிக்கோளும் இல்லாமல், முழு மனதோடு ஈடுபட வேண்டும்.

செய்யும் தொழில் சிறியதோ, பெரியதோ, "விருப்பம், ஈடுபாடு" இவை இருந்தால் போதும்.பெருமை, பணம், வெற்றி இவற்றை நோக்கிப் பயணிக்க வேண்டாம். அவையெல்லாம் உங்களைத் தேடி வரும்...

உறுதியான குறிக்கோள் வைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணிக்கும் வேளைகளில், சிலவேளை தோல்வியில் முடியலாம். ஏமாற்றம் அடையலாம், நாம் வருந்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு...

ஆனால், முழு மனதோடு, ஈடுபட்டு உழைக்கும் வேளைகளில், உறுதியாக வெற்றி கிடைக்கும், எதையும் எதிர்பார்த்து உழைக்காததால், தோல்வியுற வழியில்லை...

வெற்றியோ, தோல்வியோ, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், விருப்பம் இருக்கும் நேரத்தில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டாலும் கூட உழைப்பதற்குத் தயங்க வேண்டாம்...

ஏனெனில், நாம் ஏற்கும் பணியில் விருப்பம் இருக்கும் போது, வேலையாக நினைக்க மாட்டோம், விருப்பமாக நினைப்போம்...

உறுதியான குறிக்கோள் இருப்பது தவறல்ல, செய்யும் எந்தத் தொழிலாக இருந்தாலும் அதனை நயந்து செய்தால் முன்னேற்றம் அடையலாம், சிலர் தெரிந்து அந்தத் தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றியடைகின்றனர்...

சிலர் அறிந்தும் அறியாமலும் ஒவ்வாத அல்லது அவர்கள் அறிந்திடாத தொழிலில் ஈடுபட்டு வாழ்வில் அல்லலுறுகின்றனர்...

ஒருவர் தன்னுடைய தொழிலை தேர்ந்தெடுத்துச் செய்தார் என்றால் உறுதியாகத் தான் செய்யும் தொழிலில் வெற்றியடைவார். முன்பே தாம் உள்ள துறையில் விருப்பத்தோடு உழைக்க வேண்டும், அதைவிடச் சிறந்த வழி ஒன்றும் உள்ளது. விருப்பம் எதுவோ, விரும்பிய துறை எதுவோ, அதையே தொழிலாக அமைத்துக் கொள்ள வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

செய்யும் தொழிலை நயந்து செய்யும் பொழுது அவரையும் அறியாமல் மகிழ்வாக அந்தத் தொழிலைச் செய்வார்...

அந்தத் தொழிலில் உள்ள தொழில் நுணுக்கங்களைக் கண்டறிந்து அதில் வெற்றியும் அடைவார்...