
வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வி ஆகவோ அல்லது வெற்றி ஆகவோ அமையலாம்.
ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.
ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப்பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளி வரப் போகிறது என்றும், ஆனால் யாரும் அதற்கு உதவக் கூடாது என்றும் கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.
மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான்
தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவி செய்யத் தீர்மானித்தான்.
அந்த வண்ணத்துப்பூச்சி போராடத் தேவை இன்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான்.
ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு வண்ணத்துப்பூச்சியும் இறந்து விட்டது.
இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான்.
கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம்.
மாணவன் அந்த வண்ணத்துப்பூச்சியை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது.
ஆம்.,நண்பர்களே..,
இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில்
எதுவுமே பயன் தராது.
போராட்டம் இல்லை என்றால்., வாழ்க்கை இல்லை.
எதற்காகவும் சோர்வு அடைய வேண்டாம்..