1) வாழ்க்கையில் விட்டுப் போன பொய்யான உறவுகள் மீண்டும் தொடரும் நிலை வந்தால்,வேண்டாம் என்று முடிவெடுக்கணும்.
ஏனென்றால்...........
வார்த்தைகளில் தான் மாற்றம் இருக்குமே தவிர, மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்!!

------------------------------------------------------------------------------------------------------------
2) நமது பொறுமையின் எல்லை என்பது.........
அதை சோதிப்பவர் யார் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது..........!
அதை சோதிப்பவர் யார் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது..........!
------------------------------------------------------------------------------------------------------------
3) துன்பத்தில் துணையாகாத எதுவும்..
இன்பத்தில் இளைப்பாற்றிட அவசியமற்றது........!
இன்பத்தில் இளைப்பாற்றிட அவசியமற்றது........!
------------------------------------------------------------------------------------------------------------
4) ஒருவரின் இழப்பை சரி செய்ய மற்றொருவரைத்
தேடுவது................வாழ்வின் இறுதி வரை உங்களை அடிமையாக்கும்..!
------------------------------------------------------------------------------------------------------------
5) ஒருவரைக் காரணத்தோடு பிடித்திருந்தால் அது தேவை...
காரணமே இல்லாமல் பிடித்திருந்தால் அது தான் அன்பு ................!!
காரணமே இல்லாமல் பிடித்திருந்தால் அது தான் அன்பு ................!!
------------------------------------------------------------------------------------------------------------
6) வேண்டியது கிடைத்துவிட்டால்... இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்... ஆனால் வேண்டியதை விட அளவுக்கு அதிகமாக கிடைத்துவிட்டால்... இறைவனையே மறந்துவிடுகிறோம்.... அதுதான் மனித குணம்....!
------------------------------------------------------------------------------------------------------------
7) முடிந்ததை சிறப்பாகச் செய்தால் அது திறமை..
முடியாததை சிறப்பாகச் செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை...நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை.
முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.
பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம் குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
உங்களுக்குப் பிடித்ததைக் கடைபிடிப்பது போல மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றைப் பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள்.
ஏனென்றால் சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
பணத்தால் அன்பையோ நிம்மதியையோ வாங்க முடியாது.
வீரனைப் போரிலும் நண்பனைக் கடந்தக் காலத்திலும், நல்லவனை கடனிலும் அறிந்துக் கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
8) எவருக்கும் இரண்டாவது வாய்ப்பாக இருக்காதே!
------------------------------------------------------------------------------------------------------------
9) தாழ்வு மனப்பான்மை வருகிறதென்றால் நீ இருக்கும் இடம் தவறானது.
------------------------------------------------------------------------------------------------------------
10) உன்னைப் பொருட்டாகக் கருதாதவர்கள் அழைத்தால் அடித்துப் பிடித்து ஓடுவதை நிறுத்து, எப்போதும் கிட்டுகின்ற தூரத்தில் உன்னை வைத்துக்கொள்ளாதே.
------------------------------------------------------------------------------------------------------------
11) வாழ்விற்குள் வருபவர் அனைவரும் உனக்கானவர்கள் அல்ல. சமயங்களில் நீ என்பது, மனிதர்கள் பயணத்தில் கடந்து போகும் சிற்றூர்.
------------------------------------------------------------------------------------------------------------
12) உன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் மன்றாடாதே, அனைவரும் புரிந்தும் புரியாதது போலவே இருக்கவே விரும்புகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
13) உன் இருப்பு தேவையற்ற இடங்களில் இருந்து நகர்வதற்குத் தயங்காதே, நகராமல் நிற்கநிற்க உன் தன்மானம் சூடுபட்டுக் கொண்டே இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------
14) வேண்டாமென மறுப்பவர்களுக்கு பிடிவாதமாக நீ தரும் முக்கியத்துவங்களால்தான் புறக்கணிப்பைப் பெறுகிறாய்.
------------------------------------------------------------------------------------------------------------
15) உன்னை விரும்பாதவர்கள் எவரும் மோசமான மனிதர்கள் இல்லை, அவர்கள் உன்னை விரும்பவில்லை அவ்வளவுதான்.
------------------------------------------------------------------------------------------------------------
16) மணிக்கணக்காகப் பேசியவர்கள் திடும்மென மௌனம் காத்தால், அவர்களைப் பேசுவதற்கு வற்புறுத்தாதே, சம்பிரதாயமான குரலை விட மௌனமே சிறந்தது.
------------------------------------------------------------------------------------------------------------
17) நிரந்தரமென எவருமில்லை, ஆயினும் மனிதர்களைத் தவிர்த்துவிட்டு வாழமுடியாது, வெறுமைக்கு மனதைத் தயார்படுத்திவிட்டு திருவிழா கொண்டாடு, பெரும் கூட்டத்திலும் தனிமைக்குப் பழகு.